விருதுநகர் அருகே மனநிலை பாதித்த பெண்ணை மானபங்கம் செய்ததாக ஒருவர் அடித்துக் கொலை

விருநகர் அருகே மனநலம் பாதித்த பெண்ணை மானபங்கம் செய்ததாக கூறி ஒருவரை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து
Updated on
1 min read

விருநகர் அருகே மனநலம் பாதித்த பெண்ணை மானபங்கம் செய்ததாக கூறி ஒருவரை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டி அனுமான் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்-முத்துலட்சுமி தம்பதியின் மகள் பாப்பாத்தி(25). இவர் மனநிலை சரியில்லாத காரணத்தால் வீட்டிலேயே இருந்து வருகிறார். இவரது பக்கத்தை குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகேசன்(44). இவர் கடந்த 3 நாள்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாப்பாத்தி வீட்டிற்குள் புகுந்து மானபங்கம் செய்ததாராம்.

இச்சம்பவம் பாப்பாத்தியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அருகில் உள்ள முருகேசனிடம் நேரில் சென்று கேட்டதற்கு அலட்சியத்துடன் பதில் கூறினாராம். இதைத் தொடர்ந்து மறுநாள் மீண்டும் பாலகிருஷ்ணன், முத்துலட்சுமி, உறவினரான ஜெயராம், ராமச்சந்திரன், ஜெயப்பாண்டி ஆகியோர் முருகேசனிடம் விசாரித்தனர். அப்போது, ஆத்திரம் அடைந்த நிலையில் 5 பேரும் சேர்ந்து உருட்டு கட்டை, கம்பு ஆகியவைகளால் தாக்கியதில் முருகேசன் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, படுகாயம் அடைந்த முருகேசனை உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக முருகேசன் மனைவி செல்வி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தலைமறைவான மேற்குறிப்பிட்ட 5பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

நீதிமன்றத்தில் சரண்: இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் ஜே.எம். நீதிமன்றத்தில்  பாலகிருஷ்ணன், முத்துலட்சுமி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் சரண் அடைந்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை செய்த நீதிபதி மாரியப்பன் 3 பேரையும் 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com