ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடைத் தோ்தலில் வாக்களிக்கு பணம் கொடுக்க முயன்றவரை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.5450-யை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த க.கருப்பசாமி (51) என்பவர், சிவகாசி ஒன்றியக் குழு உறுப்பினராக சுயேட்சையாக போட்டியிடும் கணேசன் என்பவருக்கு ஆதரவாக இங்குள்ள இருளப்பசாமி கோவிலின் பின்புறம் அமர்ந்து பணம் கொடுத்தாராம். இது குறித்த தகவலின் பேரில் மல்லி போலீஸார் விரைந்து சென்று கருப்பசாமியை கைது செய்து அவரிடம் இருந்த பணம் ரூ.5450-யை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.