மதுரை மாநகராட்சிப் பொறியாளரை தான் ஒரு உளவுத்துறை அதிகாரி என்று கூறி, மிரட்டியவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி பொறியாளர் மதுரம். இவரது அலுவலகத்துக்கு வந்த ஆமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர், தாம் உளவுத்துறை அதிகாரி என்று கூறியுள்ளார்.
பின்னர் பொறியாளர் மீது அதிக புகார்கள் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால், பொறியாளர் தல்லாகுளம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வந்து அவரைப் பற்றி விசாரித்தபோது
அவரது பெயர் லலித் டோலோபியா என்பதும் அவர் குஜராத் ஆமதாபாத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
பின்னர் அவர், பொறியாளரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.