விருதுநகர் அருகே அரசு பேருந்து எரிப்புச் சம்பவம்: 3 பேரிடம் விசாரணை

காரியாபட்டி பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் அரசு பேருந்து ஒன்று கம்பிக்குடிக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத  நேரத்தில் மர்ம் கும்பல் பேருந்தின் மீது பெட்ரோல்
Updated on
1 min read

விருதுநகர் அருகே காரியாபட்டி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து எரிப்புச் சம்பவம் தொடர்பாக போலீஸார் 3 பேரை பிடித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

காரியாபட்டி பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் அரசு பேருந்து ஒன்று கம்பிக்குடிக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத  நேரத்தில் மர்ம் கும்பல் பேருந்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்களாம்.அதில், பேருந்தின் பின்புறம் தீப்பிடித்து மளமள பரவி எரியத் தொடங்கியது. இது தொடர்பாக அப்பேருந்தின் ஓட்டுநர் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து வழக்கு பதிவு தலைமறைவான மர்ம நபர்களை தேடி வந்தனர். 

இந்நிலையில் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த குருசாமி, கண்ணன், சுரேஷ் ஆகியோரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து அரசு பேருந்து எரிப்புச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com