வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காமராஜர் சிலை உடைப்பை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தீயணைப்பு நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த மார்பளவு காமராஜர் சிலை உடைத்து சேதப்படுத்தியதை கண்டித்து திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ்

News image
Updated On :29 செப்டம்பர் 2014, 9:59 am

ஷேக் அப்துல்காதர்

தூத்துக்குடியில் காமராஜர் சிலை உடைக்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து திங்கள்கிழமை திருநெல்வேலியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் தீயணைப்பு நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த மார்பளவு காமராஜர் சிலை உடைத்து சேதப்படுத்தியதை கண்டித்து திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் கே. ராம்நாத், கிழக்கு மாவட்டத் தலைவர் ஏ. தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. பா. வேல்துரை, மாவட்ட பொதுச்செயலர் சங்கரபாண்டியன், மாநகர் மாவட்ட துணைத் தலைவர் பகவத்சிங், மகிளா காங்கிரஸ் தலைவி கோமதிசண்முகம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏ.பி. சரவணன், சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.