ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீக்குளித்த மாணவி சாவு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலை வஞ்சிநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அதிமுக தொண்டர். இவரது மகள் நாகலட்சுமி (17). அதிமுகப் பொதுச்செயலர் ஜெயலலிதா மீதான
Updated on
1 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மதுரை அருகே தீக்குளித்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலை வஞ்சிநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அதிமுக தொண்டர். இவரது மகள் நாகலட்சுமி (17). அதிமுகப் பொதுச்செயலர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், திடீரென தீக்குளித்தார். அவர் அளித்த வாக்குமூலத்திலும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீக்குளித்ததாக கூறினார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், மாணவி சடலம் குடும்பத்தினரிம் ஒப்படைக்கப்பட்டது.

மாணவி சடலத்துக்கு பேரையூர், எழுமலைப் பகுதி அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். எழுமலைப் போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com