பாசனக் கால்வாயினை அழிக்க எதிர்ப்பு: நெல்லை அருகே விவசாயிகள் முற்றுகை
திருநெல்வேலி அருகே மானூரில் தனியார் காற்றாலை நிறுவனத்திற்காக பாசனக் கால்வாயை அழித்து சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை இரவு பணி நடைபெறும் இடத்தில் திரண்டு


திருநெல்வேலி அருகே மானூரில் தனியார் காற்றாலை நிறுவனத்திற்காக பாசனக் கால்வாயை அழித்து சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை இரவு பணி நடைபெறும் இடத்தில் திரண்டு விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானூர் பெரியகுளம் வழியாக மானூரை சுற்றி உள்ள 39 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. மானூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பாசனம் குளத்தை நீரை பயன்படுத்தி பாசனம் செய்து வருகின்றனர். தூர்ந்து காணப்படும் இக்குளத்திற்கு தண்ணீர் வரத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே மானூர் அருகே மலையடிவாரத்தில் அய்யனார்குளம் என்ற இடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்திற்கு செல்ல வசதியாக பெரியகுளத்திற்கு தண்ணீர் செல்லும் மானூர், பல்லிக்கோட்டை கால்வாய்களை அழித்து சாலை அமைக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
திங்கள்கிழமை இரவு கால்வாய் அழிக்கும் பணி நடைபெற்ற இடத்தில் மானூர் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் செல்லப்பா, துணைத் தலைவர் முகம்மதுஇபுராஹீம், இசக்கித்துரை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து அங்கு பாசனக் கால்வாய் அழிக்கப்பட்டு வருவதாக சுப்பையாபுரம் ஊராட்சித் தலைவர் இ. சண்முகத்தாய் முதல்வர் மற்றும் உயர்அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...