பாகிஸ்தான் திரையரங்கில் குண்டு வீச்சு : 12 பேர் பலி
By | Published On : 12th February 2014 07:33 AM | Last Updated : 12th February 2014 07:33 AM | அ+அ அ- |

பாகிஸ்தானில் திரையரங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த குண்டு வீச்சு தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் புகழ் பெற்ற பிலோர் குடும்பத்தினருக்குச் சொந்தமான "ஷமா' என்ற தியேட்டரில் செவ்வாய்க்கிழமை சுமார் 80 ரசிகர்கள் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் 3 கையெறி குண்டுகளை அடுத்தடுத்து வீசியெறிந்ததில் 12 பேர் பலியானார்கள். காயமடைந்த 20 பேர் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த தியேட்டரில் ஆபாச திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. மேலும் இந்திய திரைப்படங்களும் அவ்வப்போது திரையிடப்பட்டு வந்தன. தீவிரவாதிகளிடம் இருந்து தியேட்டர் உரிமையாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததாக பெஷாவர் போலீஸார் தெரிவித்தனர்.