விருதுநகரில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 20ம் தேதி தொடக்கம்

விருதுநகரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 20ம் தேதி முதல், தொடர்ந்து நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
Updated on
1 min read

விருதுநகரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 20ம் தேதி முதல், தொடர்ந்து நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் விருதுநகர், அருப்புக்கேட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 335 பள்ளிகளில் இருந்து 30,170 மாணவ, மாணவிகள்  பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

இதையடுத்து 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி 20ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இம்மாவட்டத்தில் விருதுநகர் கேவிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் தலைமையாசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலக அலுவலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com