ராஜபாளையம் அருகே தேர்வு எழுதச் சென்ற மாணவி மாயம்

விருதுநகர் அருகே தேர்வு எழுதச் சென்ற பிளஸ்2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக தந்தையார் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு புகார் செய்தார்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே தேர்வு எழுதச் சென்ற பிளஸ்2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக தந்தையார் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு புகார் செய்தார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த லோகிதாசன் மகள் சினேகா(17). இவர் தளவாய்புரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 31-ம் தேதி பிளஸ்2 கடைசித் தேர்வு எழுதுவதற்காக சென்றாராம். அதையடுத்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உற்றார், உறவினர் வீடுகளில் விசாரித்துள்ளனர். அதில், சினேகா எங்கிருக்கிறார் என்கிற தகவல் கிடைக்கவில்லையாம்.

இது தொடர்பாக லோகிதாசன் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், இதே ஊரைச் சேர்ந்த போல்ராஜ் என்பவரின் மகன் முனீஸ்வரன்(17) என்பவர் தான் கடத்திச் சென்றிருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com