விருதுநகர் அருகே விஷம் குடித்த இளைஞர் சாவு

விருதுநகர் அருகே விஷம் குடித்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே விஷம் குடித்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே உள்ள எண்டப்புலி கிராமத்தைச் சேர்ந்த பவுன்தாயின் மகன் விஜயன்(19). இவர் ஆடு மேய்த்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகி்ச்சை பெற்று மருந்து மாத்திரைகள் உள்கொண்டு வந்துள்ளார். இதிலும் நிவாரணம் கிடைக்காத காரணத்தால் மனம் உடைந்த விஜயன் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு விஷம் அருந்தியுள்ளார்.

இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் முதலுதவி சிகி்ச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக புவன்தாய் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com