மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மின்பகிர்மான கோட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7-ம் தேதி நடைபெற இருக்கிறது.
Updated on
1 min read

விருதுநகர் மின்பகிர்மான கோட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    இது தொடர்பாக மின்பகிர்மான கோட்டத்தின் செயற்பொறியாளர் செ.ராமமூர்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: இக்கூட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் மேற்பார்வை பொறியாளர் ந.சசிதரன் தலைமையில் நடைபெற இருக்கிறது. அதனால், இக்கோட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் அனைவரும் பங்கேற்று மின்விநியோகம் செய்வதில் ஏற்படும் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com