விருதுநகர் அருகே பைக்கில் தவறி விழுந்த பெண் சாவு

விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே வாய்ப்பூட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜின் மனைவி பாண்டியம்மாள்(45). இவர் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று விட்டு, 4 வழிச்சாலையில் உள்ள வாய்ப்பூட்டான்பட்டி விலக்கில் கிராமத்திற்கு செல்வதற்காக பேருந்தை எதிர்பார்த்து ஞாயிற்றுக்கிழமை இரவில் காத்திருந்தாராம்.

அப்போது, அவரது உறவினரான கணேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வர அதில் ஏறிச் சென்றுள்ளார். அச்சாலை குண்டும், குழியுமாக இருந்த காரணத்தால் எதிர்பாரதவிதமாக தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலைய போலீஸார் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரி்த்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com