தூத்துக்குடியில் அனல் மின் நிலைய பொறியாளர் கைது

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பிரிவில் உதவி செயற்பொறியாளராக வேலைபார்த்து வருகிறார்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பிரிவில் உதவி செயற்பொறியாளராக வேலைபார்த்து வருகிறார்.

அனல் மின் நிலையம் அருகேயுள்ள முத்துநகர் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற மணிகண்டன் தனது நண்பர் ராஜேஷ்குமாருடன் சேர்ந்து அந்தப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை தனது செல்லிடைப் பேசியில் படம்பிடித்தாராம். 

இதையடுத்து, அங்கு கூடியிருந்தோர் மணிகண்டனையும், அவரது நண்பர் ராஜேஷ்குமாரையும் பிடித்து தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்குப் பதிந்த போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com