விருதுநகர் அருகே அதிகமாக மதுக்குடித்த தொழிலாளி சாவு 

விருதுநகர் அருகே அதிகமாக மதுக்குடித்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே அதிகமாக மதுக்குடித்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துவேல்பாண்டி(42). இவர் குடிப்பழக்கம் உடையவாராம். இந்நிலையில் தனது மனைவி பாக்கியத்துடன் திங்கள்கிழமை இரவு விருதுநகர் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றார். அங்கு திருவிழாவை பார்த்து விட்டு இரவில் மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, அப்பகுதியில் மதுக்குடிப்பதற்காக சென்றுள்ளார்.

ஆனால், அதைத் தொடர்ந்து வடமலைக்குறிச்சி மாலையம்மன் கோயில் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாராம். இது தொடர்பாக அவரது மனைவி பாக்கியம் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அளவுக்கு அதிகமாக மதுக்குடித்ததால் உயிரிழந்தாரா அல்லது விஷம் கலந்து குடித்து உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com