ஜயங்கொண்டம் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் 3 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, அண்மையில் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஜயங்கொண்டத்தைச் சேர்ந்த விவசாயி தனவேல்(40) அந்த சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, ஆளில்லாத பகுதிக்குச் சென்று அவரை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார். தனவேலிடம் இருந்து தப்பிய சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிந்து தனவேலை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.