விருதுநகர் அருகே வாகன விபத்தில் ஒருவர் சாவு: 3 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் திரும்பிய லாரி மீது கார்  மோதிய விபத்தில் சனிக்கிழமை ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்
விருதுநகர் அருகே வாகன விபத்தில் ஒருவர் சாவு: 3 பேர் படுகாயம்
Updated on
1 min read

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் திரும்பிய லாரி மீது கார்  மோதிய விபத்தில் சனிக்கிழமை ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும், காரில் பயணம் செய்த தச்சு வேலை தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி அருகே சாத்தாங்குளத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம்(50). இவர் சென்னையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருநெல்வேலிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு வந்து இறக்கிவிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து சனிக்கிழமை காலையில் புறப்பட்டுள்ளார். அப்போது, திருநெல்வேலியை சேர்ந்த நெல்லையப்பன்(40), முருகன்(31), மாரியப்பன்(35) ஆகியோர் தச்சு வேலை செய்வதற்காக ராமநாதபுரம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்களாம். அந்த தொழிலாளர்களிடம் குறைந்த கட்டணத்தில் மதுரையில் இறக்கி விடுவதாக டிரைவர்  கூறியதை தொடர்ந்து காரில் ஏறியுள்ளனர்.

அந்தக் கார் விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த போது பட்டம்புதூர் விலக்கு அருகே கழிவு மண்ணைக் கொட்டிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் டிரைவர் சிதம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் தப்பியோடிய லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com