புதுகையில் ஏப்.18 -ல் இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் மாநாடு

புதுக்கோட்டையில் இம்மாதம் 18 -ம் தேதி இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்துவதென  இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
Updated on
1 min read

புதுக்கோட்டையில் இம்மாதம் 18 -ம் தேதி இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்துவதென  இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டையில்  அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை அலுவலகத்தில் அப்பேரவையின் நிறுவனர் வைர.ந.தினகரன் தலைமையில், முன்னோடி இயற்கை விவசாயி ஆ. ஞானப்பிரகாசம் முன்னிலையில்  சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், குரும்பூர் ஒத்தக்கடை வள்ளலார் நகரில் இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் இயக்கம் சார்பாக  18.4.2015 -ல் “இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் மாநில மாநாடு- 2015” நடத்துவது. அதில்,இயற்கை விவசாயம், இயற்கை மருத்துவம், மதுவிலக்கு, ஆரோக்கிய உணவுமுறை,சுற்றுச்சூழல்பாதுகாப்பு, காந்திய கிராமப் பொருளாதார மேம்பாடு,பூமிதானம், நீர் மேலாண்மை, பெண்கள் குடும்பச் சுகாதாரம் சன்மார்க்க நெறிகள்,யோகா போன்ற  தலைப்புகளில் தமிழகத்தின் தலைசிறந்த இயற்கை வாழ்வியல் ஆர்வலர்களைக் கொண்டு கருத்தரங்கம், வாழ்த்தரங்கம்   நடத்துவது.

மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் அனைவரையும் அழைத்து ஒருங்கிணைத்து இயற்கையை காக்க உறுதி ஏற்பது.  மாநாட்டுக்குழு  அமைப்பது. மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் இயற்கை உணவு வகைகள், இயற்கை பானங்கள் வழங்குவது. மரக்கன்று தேவைப்படுவோருக்கு மரக்கன்று வழங்குவது.  பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள்,சமூக அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் மாநாட்டு நிகழ்வை விளம்பர பதாகைகள், துண்டறிக்கைகள் மூலம்  தெரியப்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நிர்வாகிகள் வௌ்ளைச்சாமி,  கலியபெருமாள், வேதரத்தினம், முத்துலெட்சுமி உள்ளிட்ட இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் இயக்க நிர்வாகிகள், காந்தி பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com