அருப்புக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மகளிர் குழுவினர் முற்றுகை

அருப்புக்கோட்டை அருகே குடிகாரர்களால் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுவதால் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி மகளிர் குழுவினர் ஆட்சியர்
Updated on
1 min read

அருப்புக்கோட்டை அருகே குடிகாரர்களால் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுவதால் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி மகளிர் குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

அருப்புக்கோட்டை அருகே போடம்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூராக இருந்து வரும் மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவைச்   சேர்ந்தோர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இக்கிராமத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றியுள்ள வதுவார்பட்டி, குருந்தமடம் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து மது குடிக்க வருகிறார்கள். அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு உடைகள் விலகிய நிலையில் சாலையோரத்தில் விழுந்து கிடக்கின்றனர். இங்கிருந்து அருகில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவிகளையும், குடியிருப்பு பகுதிகளில் பெண்களையும் குடிகாரர்கள் கேலி கிண்டல் செய்து ஆபாசமாக பேசுகின்றனர்.

கிராமத்திற்குள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பெண்கள், குழந்தைகள் மீதும் மோதி காயம் ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்கின்றனர். இதனால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுகிறது. மாலை நேரங்களில் சாலையின் இருபுற ஓரங்களிலும் மதுக்குடிப்பதற்காக அமர்ந்து கொள்கின்றனர். அதோடு குடித்து விட்டு காலி மதுபாட்டில்களை சாலையில் வீசி உடைத்துச் செல்கின்றனர்.இதனால் அச்சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கால்களில் குத்தி காயம் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அரசு மதுபானக்கடையை உடனே அகற்ற வலியுறுத்தி மகளிர் குழுவினர்  ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து உடனே அகற்றுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து மகளிர் குழுவினர் கலைந்து சென்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com