

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி தமிழுக்குத் தொண்டாற்றும் தமிழறிஞர்களுக்கும் தமிழ் வளர்க்கும் சிறந்த அமைப்பிற்கும் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகளும் தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி,
2014ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான நவி மும்பை தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
2014ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கபிலர் விருது - முனைவர் அ. இலலிதா சுந்தரம்
உ.வே.சா. விருது - மருது அழகு ராஜா
கம்பர் விருது - முனைவர் செ.வை. சண்முகம்
சொல்லின் செல்வர் விருது - மருத்துவர் சுதா சேசையன்
ஜி.யு.போப் விருது - ஜெ. நாராயணசாமி
உமறுப்புலவர் விருது - முனைவர் சே.மு. முகம்மதலி
இத்துடன் 2013ஆம் ஆண்டின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
2015ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் 2015ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்
உ.வே.சா. விருது - திரு. குடவாயில் பாலசுப்பிரமணியன் கம்பர் விருது - கோ. செல்வம்
சொல்லின் செல்வர் விருது - முனைவர் சோ. சத்தியசீலன்
ஜி.யு.போப் விருது - மதுரை இளங்கவின் (எம். ஆரோக்கியசாமி)
உமறுப்புலவர் விருது - மு. சாய்பு மரைக்காயர்
இளங்கோவடிகள் விருது - முனைவர் நிர்மலா மோகன்
2014ஆம் ஆண்டின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விருபா வளர்தமிழ் நிகண்டு து. குமரேசன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் மேற்காண் விருதுகள் அனைத்தும் அரசால் பின்னர் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.