அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே அருங்கால் கிராமத்தைச் சேர்ந்த கலியன் என்பவரது மகன்கள் ராஜங்கம், ஜெயராமன்61. ஜெயராமன் தனது அண்ணன் ராஜாங்கத்திற்கு ரூ.16000 கடனாக கொடுத்தாராம். இதனை அவர் திருப்பிக் கேட்டுவந்த நிலையில் கடந்த 14.1.2014 இரவு அண்ணன் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தார் ஜெயராமன். இதில் கடும் கோபம் அடைந்த அவர் ராஜாங்கத்தை அறிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த ராஜாங்கம் அங்கிருந்து தப்பினார்.
இது குறித்து கீழபழுவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அரியலூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீப்பில் குற்றவாளி ஜெயராமனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.