விருதுநகர் மாவட்டத்தில்  சுற்றுச்சூழல் பணிகள் சிறப்பாக மேற்கொண்ட 15 பள்ளிகளுக்கு பரிசு 

விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பணிகள் சிறப்பாக மேற்கொண்ட 5 அரசு பள்ளிகளுக்கு தலா 20 ஆயிரமும், 10 தனியார் பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மொத்தம் ரூ.2 லட்சம் பரிசு அளிக்கப்பட இருப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பணிகள் சிறப்பாக மேற்கொண்ட 5 அரசு பள்ளிகளுக்கு தலா 20 ஆயிரமும், 10 தனியார் பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மொத்தம் ரூ.2 லட்சம் பரிசு அளிக்கப்பட இருப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்காக 50 பேர் கொண்ட தேசிய பசுமை படை இயக்கம் இயங்கி வருகிறது. இப்படை சார்பில் வெப்பமயமாதல், பிளாஸ்டிக் இல்லாத வளாகம் உள்ளிட்ட பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி வளாகத்தை புகையிலை, பிளாஸ்டிக் இல்லாமல் தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பசுமையாக்கவும் சுற்றிலும் மரக்கன்றுகள் வைத்து பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கான பணிகளை சிறப்பாக செய்த பள்ளிகளை தேர்வு செய்து ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் துறை சார்பில் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டு  வருகிறது. அவ்வகையில் இம்மாவட்டத்தில் நிகழாண்டிற்கான பரிசு வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு பரிசளிக்கப்பட இருக்கிறது.

    அதன் அடிப்படையில் அரசு மேல்நிலைப்பள்ளி-நடுவபட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி-கிழவிகுளம், அரசு மேல்நிலைப்பள்ளி-சூலக்கரை, அரசு மேல்நிலைப்பள்ளி-படந்தால், அரசு உயர்நிலைப்பள்ளி-பாம்பாட்டி ஆகிய 5 பள்ளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் பரிசாக அளிக்கப்படுகிறது.

   அதேபோல், தனியார் பள்ளிகளான சௌடாம்பிகா மேல்நிலைப்பள்ளி-அல்லம்பட்டி, கலைமகள் மேல்நிலைப்பள்ளி-திருத்தங்கல், எஸ்.இ.எம்.எஸ்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி-சாட்சியாபுரம், பி.ஏ.சி.எம்.மேல்நிலைப்பள்ளி-ராஜபாளையம், இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி-ஸ்ரீவில்லிபுத்தூர், பழனியப்பா மேல்நிலைப்பள்ளி-சோழபுரம், அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.ஏ.சி.ஆர்.அம்மணி அம்மாள் மேல்நிலைப்பள்ளி-ராஜபாளையம், பி.கே.மேல்நிலைப்பள்ளி-கிருஷ்ணாபுரம், எஸ்.என்.மேல்நிலைப்பள்ளி-மம்சாபுரம் ஆகிய பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசும் சுற்றுச்சூழல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தொகை அந்தந்தப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் காசோலையாக மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com