விருதுநகரில் சாலைப்பணியாளர்கள் சங்கத்தின்  மாவட்ட செயற்குழு கூட்டம் 

விருதுநகர் மாவட்ட சாலைப்பணியாளர் சங்கத்தின் செயற்கு கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட சாலைப்பணியாளர் சங்கத்தின் செயற்கு கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட சாலைப்பணியாளர் சங்கத்தின் தலைவர் ஹபி அபுதுல்லா தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் கோபால் முன்னிலை வகித்தார். சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் அம்சராஜ் துவக்கவுரை வழங்கினார். இச்சங்கத்தின் வைரவன். பச்சைமால் உள்ளிட்டோர் இச்சங்கத்தின்  செயல்பாடுகள் குறித்து அறிக்கை வாசித்தனர். இதில், 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணிகளை தனியாரிடம் பராமரிக்க ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில ச.கண்ணன், சாலைப்பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினார். இதில், சாலைப்பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com