விருதுநகரில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் துணைத்தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் அலெக்ஸாண்டர் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

     இதில், ஆசிரியர்கள் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வு திட்டத்தை கைவிட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும் மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவதற்கு தனி அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிறைவாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக பொதுச்செயலாளர் ராஜபாண்டி பங்கேற்று உண்ணாவிரதப்போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார். இப்போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com