விருதுநகர் அருகே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட தாய், மகன் கைது: 16 சவரன் நகை மீட்பு

விருதுநகர் அருகே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட தாய், மகனை பாண்டியன்நகர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 16 சவரன் நகைகளும் மீட்கப்பட்டது.
Updated on
1 min read

விருதுநகர் அருகே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட தாய், மகனை பாண்டியன்நகர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 16 சவரன் நகைகளும் மீட்கப்பட்டது.

விருதுநகர் அருகே ஓடைப்பட்டியைச் சேர்ந்த பத்திரகாளி(47). இவர் மல்லாங்கிணறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். பத்திரகாளி மற்றும் அவரது மகன் பாண்டியராஜன்(27) இருவரும் கோயில்கள், பேருந்து நிறுத்தங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் இருந்து நகை மற்றும் பணப்பைகளை திருடும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள், பாண்டியன்நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது.

இது தொடர்பாக ஆய்வாளர் ராமகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர் அருண் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்து பத்திரகாளி மற்றும் பாண்டியராஜனையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 16 சவரன் நகைகளையும் மீட்டு வேறு திருட்டுச் சம்பவங்களில் தொடர்புள்ளதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com