மத்திய மாநில அரசைக் கண்டித்து எ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களுக்கான நலச்சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்கிழமை
மத்திய மாநில அரசைக் கண்டித்து எ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தொழிலாளர்களுக்கான நலச்சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் பி.எம்.ராமசாமி தலைமை வகித்தார். சிபிஐயின் மாவட்ட செயலாளர் சி.ராமசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், தொழிலாளர் நலவாரியத்தை செயல்படுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்கவும், மாதந்தோறும் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நடராஜன், மின்வாரிய தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com