இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுப்பு: இளைஞர் கைது

விருதுநகர் அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை வச்சக்காரப்பட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை வச்சக்காரப்பட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகள்  குருலட்சுமி(20). இவர் அருகேயுள்ள தம்மநாயக்கன்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அப்போது, இதே ஊரைச் சேர்ந்த பால்பாண்டியின் மகன் ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் வேலைக்காக ராஜா கேரளத்திற்கு சென்றாராம்.

இதற்கிடையே ஜெயராஜ் தனது மகளை உறவினரான மாரீஸ்வரனுக்கு கடந்த ஆண்டு மகளை திருமணம் செய்து கொடுத்தாராம். இந்நிலையில் நாள்தோறும் மதுக்குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்தி கொடுமை செய்துள்ளார். அதனால்  கணவரை பிரிந்து தனியாக இருந்து வந்தார்.இதற்கிடையே பழைய காதலர் ராஜா ஊருக்கு வந்ததை தொடர்ந்து மீண்டும் நெருங்கி பழகியதில் குருலட்சுமி கர்ப்பமானார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ராஜாவிடம் கூறியதற்கு மறுத்தாராம். இது குறித்து குருலட்சுமி வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com