சாத்தூர் அருகே பஞ்சுகுடோனில் தீ விபத்து

சாத்தூர் அருகே பஞ்சுகுடோனில் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் புதன்கிழமை பஞ்சுகள் எரிந்து நாசமானது.
Updated on
1 min read

சாத்தூர் அருகே பஞ்சுகுடோனில் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் புதன்கிழமை பஞ்சுகள் எரிந்து நாசமானது.

சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(60) என்பவருக்கு சொந்தமான பஞ்சுக்குடோன் உள்ளது. இக்குடோனில் சிமெண்ட் ஓடுகள் போடுவதற்கான இரும்பு ஆங்கிலில் கேஸ் வெல்டிங் வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீப்பொறி பருத்தி பஞ்சின் மீது விழுந்ததில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

இது தொடர்பாக உடனே சிவகாசி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், குடோனில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமானது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com