திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் எவ்விதமான வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தவில்லை: ஜி.கே.மணி

தென்மாவட்டங்களில் விவசாயிகள் பயனடையும் வகையில் கண்மாய் குளங்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.
Updated on
1 min read

திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் எவ்விதமான வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தவில்லை என பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.

விருதுநகர் மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ம.கவின் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ம.க சார்பில் அன்புமணி ராம்தாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் எவ்விதமான வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தவில்லை. அதனால், பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால், அதை பா.ம.க செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்டந்தோறும் நடத்தப்படும் கூட்டங்களில் இதுவரையில் எக்கட்சியிலும் உறுப்பினராக இல்லாதவர்கள் பா.ம.கவில் தானாக வந்து சேருகின்றனர். விருதுநகர் மாவட்ட பொதுமக்களின் முக்கிய பிரச்னையான சிவகாசி, திருத்தங்கல்லில் ரயில்வே மேம்பாலப்பணிகள் ஆய்வு செய்துள்ளனர். அதை உடனே அமைப்பதற்கு நடவடிக்கை வேண்டும். விவசாயம், சிறு தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வந்த நிலையில், சரியான அக்கரை செலுத்தாத காரணத்தால் நலிவடைந்து உள்ளது. இதனால் தமிழ்நாடு தொழில் வளம் இல்லாத மாநிலமாக உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்மாவட்டங்களில் உள்ள கண்மாய்கள் மற்றும் நீர் ஆதாரங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இதில், மாநில துணைப்பொதுச்செயலாளர் லட்சுமணன், இணை பொதுச் செயலாளர் இசக்கி படையாச்சி உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com