அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ரூ.3 லட்சத்தில் தங்கும் அறை

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.3 லட்சத்தில் பணியாளர்கள் தங்கும் அறை

Updated On :24 ஏப்ரல் 2015, 12:47 pm

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.3 லட்சத்தில் பணியாளர்கள் தங்கும் அறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தம் ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பிரசவித்த தாய், குழந்தையை ஏற்றிச் செல்வதற்கும், கிராமங்களில் இருந்து நோயாளிகளை ஏற்றி வருவதற்கும் என 108 ஆம்புலன்ஸ் 2 வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தவும், பணியாளர்கள் தங்குவதற்கான வசதியின்றி   இருந்து வந்தனர். அதனால் தங்கும் அறை அமைக்க வலியுறுத்தி நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்தும் வந்தனர்.

அதன் அடிப்படையில் அரசு மருத்துவமனையின் எதிர்புறம் உள்ள பிரசவ சிகிச்சை பிரிவு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட சிறப்பு நிதியிலிருந்து மழையில் வாகனங்கள் நனையாமல் நிறுத்தும் வகையிலும், சுகாதார வளாக வசதியுடன் பணியாளர் தங்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.பிரகலாதன் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.