பேரளி பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஏப். 24) மின் விநியோகம் இருக்காது என்றார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம்.
Updated on
1 min read

பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஏப். 24) மின் விநியோகம் இருக்காது என்றார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பேரளி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெரும் பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூர் நகரில் நாளை மின் தடை:

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூர் பழைய, புறநகர் பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்கு சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை மற்றும் கிராமிய பகுதிகளான பீல்வாடி, அசூர், சிறுகுடல், சித்தளி, அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ். குடிக்காடு, வடக்குமாதவி, எளம்பலூர், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 25) காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com