விருதுநகர் மாவட்டத்தில் முதல் தலைமுறை இளைஞர்களிடம் இருந்து தொழில் தொடங்க விண்ணப்பம் வரவேற்பு 

விருதுநகர் மாவட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து தொழில் தொடங்குவதற்கான மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.   
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து தொழில் தொடங்குவதற்கான மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.   

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கவும் மாவட்ட தொழில் மையம் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு பட்டம், பட்டயம், தொழிற்பயிற்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும்.    பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வரையிலும் மற்ற பிரிவினருக்கு 21 வயது முதல் 45 வயது வரையிலும் இருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் குடியிருந்து வருபவராக இருத்தல் வேண்டும்.

அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் செய்வதற்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் கடன் அளிக்கப்படுகிறது. இதற்கு மானியமாக 25 சதவீதம் வழங்கப்படுகிறது. மேலும், என்ன தொழில் செய்வதற்கு விரும்புகிறார்களோ அத்தொழில் தொடர்பாக 1 மாதம் வரையில் மாவட்ட தொழில் மையம் மூலம் பயிற்சி அளிக்கப்படவும் இருக்கிறது.   

எனவே இது குறித்து விண்ணப்பங்கள் பெற ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பொதுமேலாளர், மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரில் வேலை நாள்களில் அணுகலாம். மேலும், தொலைபேசி எண்-04562252739 அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சிவகாசி-04562-229322 ஆகியவைகளில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com