விருதுநகர் தேசபந்து மைதானம்:ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்மேற்கொள்ள பூமிபூஜை

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியை மேற்கொள்வதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலையில் பூமிபூஜை நடைபெற்றது.  
விருதுநகர் தேசபந்து மைதானம்:ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்மேற்கொள்ள பூமிபூஜை
Updated on
1 min read

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியை மேற்கொள்வதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலையில் பூமிபூஜை நடைபெற்றது.   

விருதுநகர் நகராட்சியின் மையப்பகுதியில் தேசபந்து மைதானம் அமைந்துள்ளது. எந்த நேரமும் போக்குவரத்தும், பொதுமக்களும் அதிகம் நடமாடும் பகுதியாகும். அதனால் மைதானம் முழுவதும் மணலாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் போதும் அதிகமான தூசியும் பறக்கிறது. இதனால் பெரியோர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் பாதிக்கப்படும் சூழ்நிலையிருக்கிறது. அதனால், பேவர் கற்கள் பதிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.     இதற்கான பூமிபூஜை எம்.எல்.ஏ தலைமையில் தேசபந்து மைதானத்தில் நடந்தது. இதில், நகராட்சி தலைவர் மா.சாந்தி, துணைத் தலைவர் மாரியப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஐ.மாரியப்பன், ஒன்றியச்செயலாளர் மூக்கையா, எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஐ.ஆர்.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.     

மேலும், இதேபோல் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதி மூலம் காமராஜர் நினைவில்லத்திற்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக குளிர்சாதன இயந்திரத்துடன் குடிநீர் வழங்குவதற்கு ரூ.3.05 லட்சமும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் கச்சேரி சாலையில் வி.வி.ஆர்.சிலை வளாகத்தில் ரூ.6 லட்சத்தில் பூங்கா அமைக்கவும் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com