அரசு மருந்துகள் ஆம்பூரில் குப்பையில் கண்டெடுப்பு

ஆம்பூரில் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் இலவச மருந்துகள் குப்பையில் வீசியிருப்பது சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
Updated on
1 min read

ஆம்பூரில் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் இலவச மருந்துகள் குப்பையில் வீசியிருப்பது சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் குளோட்ரி மசோல் எனப்படும் கிரீம் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.   அரசு மருத்துவமனைகளுக்கு தோல் மற்றும் சரும நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு இந்த கிரீம் அளிக்கப்படுகிறது. இந்த மருந்து அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் விற்பனைக்கு இல்லை.  தமிழ்நாடு அரசு வழங்குவது,  விற்பனைக்ககு கிடையாது என அந்த மருந்து பெட்டிகளில் மீது அச்சிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மருந்து டியூப் அடங்கிய பெட்டிகள் கட்டு கட்டாக ஆம்பூர் மகளிர் காவல் நிலையம் அருகே உமர்சாலை பகுதி குப்பையில் கிடந்தன.   அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்கள் அதை எடுத்து பார்த்து அழகு கிரீம் என நினைத்து தங்கள் முகத்தில் மற்றும் உடலில் பூசி கொண்டிருப்பதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர்.   உடனே அவர்கள் அது என்ன கிரீம் என பார்த்த போது அது மருந்து கிரீம் எனத் தெரியவந்தது.  உடனே அச்சிறுவர்களை அழைத்து அது அழகு கிரீம் அல்ல.  மருந்து என கூறி அவர்கள் அதனை தண்ணீர் போட்டு கழுவி சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

அந்த மருந்து கிரீம் மார்ச் 2015-ல் காலாவதியாகியுள்ளது.  அது அரசு மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்து வீசப்பட்டதா அல்லது வெளி மார்க்கெட்டில் கள்ளத் தனமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு காலாவதியான பிறகு குப்பையில் வீசப்பட்டதா என்பது புரியாத புதிராக உள்ளது. நோயாளிகளுக்காக வழங்கப்படும் மருந்துகள் முறையாக அவர்களை சென்றடையாமல் வெளி மார்க்கெட்டிற்கும், காலாவதியான பிறகு குப்பை தொட்டிக்கும் தான் செல்கின்றன. அதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com