காரியாபட்டியில் முறைகேடாக லாரி விற்று ரூ.1.30 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு

காரியாபட்டியில் முறைகேடாக லாரியை விற்பனை செய்து ரூ.1.30 லட்சம் மோசடி செய்த டிரைவர் உள்பட 3 பேர் மீது செவ்வாய்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரி்த்து வருகின்றனர்.
Updated on
1 min read

காரியாபட்டியில் முறைகேடாக லாரியை விற்பனை செய்து ரூ.1.30 லட்சம் மோசடி செய்த டிரைவர் உள்பட 3 பேர் மீது செவ்வாய்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரி்த்து வருகின்றனர்.

காரியாபட்டியைச் சேர்ந்த சுப்புராமனின் மகன் நாகஜோதி(40). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இதில், செவல்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(42) என்பவர் டிரைவராக இருப்பதால் அவரிடம் நம்பிக்கையுடன் லாரியை ஒப்படைத்திருந்தார். இந்த லாரியை உரிமையாளருக்கு தெரியாமல் மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த விருமாண்டி உதவியுடன், தேனியைச் சேர்ந்த உதயராஜாவுக்கு கடந்த 4-ம் தேதி ரூ.1.30 லட்சத்திற்கு கிரையம் செய்துள்ளார். அதோடு டிரைவர் அந்த பணத்தை செலவும் செய்துள்ளார். இதை தொடர்ந்து உதயராஜா லாரிக்கான ஆவணங்களை கேட்டதற்கு காலதாமதம் செய்தாராம். இதற்கிடையே முறைகேடாக லாரியை விற்றது தொடர்பான தகவல் நாகஜோதிக்கு தெரியவந்துள்ளது.

உடனே இது தொடர்பாக காரியாபட்டி காவல் நிலையத்தில் நாகஜோதி புகார் செய்தார். அதன் அடிப்படையில் டிரைவர் பாலகிருஷ்ணன், விருமாண்டி மற்றும் உதயராஜா ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com