

விருதுநகர் நகராட்சியில் பழுதடைந்துள்ள சின்டெக்ஸ் தொட்டி மோட்டார்களை பழுது நீக்கம் செய்ய வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்கிழமை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் நகராட்சி 23-வார்டு பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். அதோடு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மோட்டார் வசதியுடன் 7 சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைத்து தேவையான உவர்ப்பு பிடித்து நீரை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த வார்டில் உள்ள மூஞ்சிமாதா கோவில் தெரு, வாட்டர் டேங்க் சாலை, 1-வது தெரு, ரேசன் கடை சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலைப் பகுதியில் உள்ள 6 சின்டெக்ஸ் தொட்டி மோட்டார்கள் கடந்த ஒரு வாரமாக பழுதடைந்துள்ளது. இதை சரி செய்ய வலியுறுத்தி அப்பகுதி நகராட்சி உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, நகராட்சி உதவி பொறியாளர் முருகேசன், முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்கள் பாத்திரங்கள் மற்றும் துணிகள் சுத்தம் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும், தேவையான உவர்ப்பு நீரை வெளியில் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையும் இருந்து வருவதாக அலுவலரிடம் தெரிவித்தனர். அதையடுத்து உடனடியாக சின்டெக்ஸ் தொட்டி மோட்டாரை சீரமைத்து தருவதாக உறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.