விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 9 ஆயிரம் விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து இதுவரையில் 9 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவேற்றம்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து இதுவரையில் 9 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக செவ்வாய்கிழமை மேலும் அவர் கூறியாதவது:

இம்மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள 154 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 24-ம் தேதி முதல், தொடர்ந்து மே 6-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருக்கிறது. இப்பணியிடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் தேர்வதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பதால் அதிகம் பேர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்காக இம்மாவட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு தேர்வு மையங்களில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் பி.ஏ.சி.எம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவைகளில் ஆண்களுக்கும், விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பெண்களுக்கும் என பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்குறிப்பிட்ட மையங்களுக்கு இருபாலரும் நேரில் சென்று இது வரையில் மொத்தம் 9 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும், மே-6ம் தேதி வரையில் நாள்கள் உள்ளதால் விண்ணப்பங்கள் அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com