உப்புச் சத்தியாகிரக போராட்ட நினைவு: வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 85-வது ஆண்டு நினைவையொட்டி,தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி,உப்பு அள்ளிய நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
Updated on
1 min read

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 85-வது ஆண்டு நினைவையொட்டி,தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி,உப்பு அள்ளிய நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

வேதாரண்யத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப்ரல் 30 ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில்,ஆண்டுதோறும் ஏப்ரல் 30 ஆம் நாள் உப்பு அள்ளி,மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நிகழாண்டுக்கான நிகழ்ச்சியாக வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளியில் அமைந்துள்ள உப்புச் சத்தியாகிரக நினைவு தூண் அருகே தியாகிகளுடன்,சமூக ஆர்வலர்கள், காங்கிரஸார் உப்பு அள்ளி போராட்ட நினைவை வெளிப்படுத்தினர்.

இதில்,ராஜாஜியின் பேரன் சி.கே.கேசவன்,போராட்டத்தில் பங்கேற்று தண்டனை பெற்ற சர்தார் வேதரத்தினத்தின் பேரன் அ. வேதரத்தினம்,இசைக் கலைஞர் ஸ்மித்ரா மாதவ் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து பறப்பட்ட ஊர்வலம் சத்யாகிரக பாதை வழியே ஸ்தூபியை வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com