விருதுநகர் மாவட்டத்தில் மே தினமான தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக்கடைகளையும் நாளை(வெள்ளிக்கிழமை) மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வியாழக்கிழமை வெள்யிட்டுள்ள செய்திக் குறிப்பில், மே தினமான தொழிலாளர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதனால், அன்றைய நாளில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், எப்.எல்.2 கிளப்புகள் மற்றும் பார்கள், எப்.எல்-3 உரிமம் பெற்ற ஹோட்டல்களின் பார்கள் உள்ளிட்ட மதுக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.