விருதுநகர் அருகே உரக்கழிவுகள் கலந்த புல்களை மேய்ந்த 29 வெள்ள ஆடுகள் வியாழக்கிழமை திடீரென உயிரிழந்தன.
விருதுநகர் அருகே டான்பெட் உர நிறுவன வளாகத்தில் சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆடுகளை மேய்ப்பது வழக்கமாகும். அதேபோல், இப்பகுதியில் டான்பெட் உர நிறுவன வளாகத்தில் உள்ள புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துள்ளது.
பின்னர் சிறிது நேரத்தில் அப்பகுதியைச் சுற்றிலும் திடீரென மயங்கி விழுந்தும் வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆடுகள் உயிரிழந்தன. இதில், விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குருவு, சுப்பையன், குருசாமி, ஜெயசங்கர் மற்றும் புஷ்பம் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் 29 வெள்ள ஆடுகள் உயிரிழந்தன.
இது குறித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், லாரிகளில் பல்வேறு வகையான உரமூட்டைகள் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அதை பாதுகாப்பாக கூட்டுறவு விவசாய வங்கிகளுக்கும் அனுப்பியும் வருகின்றனர். இதில், லாரியில் ஏற்றி இறக்கும் போது உரக்கழிவுகள் சிந்துவதை அப்படியே புல்வெளியில் சிறு, சிறு பகுதியாக குவித்து வைத்து விடுகின்றனர். இதையடுத்து, சாரல் மழையில் கரைந்த நிலையில் இருக்கும் புற்களை மேய்ந்ததால் விஷமாகி உயிரிந்து இருக்கலாம் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

