கலசலிங்கம் பல்கலை.யில் பி.டெக். 6-ம் ஆண்டு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு வளாக நேர்காணல்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேச இயலாத மற்றும் செவித்திறன்


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேச இயலாத மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான சிறப்பு 6 ஆண்டு பி.டெக். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் புதன்கிழமை துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி பேராசிரியர் அலாவுதீன் வரவேற்றார். சென்னை, செர்வ் சென்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபா வளாக நேர்காணலை நடத்தினார். இதில் சிறப்பு பிரிவின் 17 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு தேர்வுகளுக்குப் பின்னர் இறுதியாக 5 பேர் வேலைக்கு தேர்வு பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இவர்கள் ஆகஸ்டு 2-வது வாரத்தில் சென்னையில் பணியில் சேர வேண்டும்.
பணி நியமனம் பெற்ற மாணவர்களை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...