ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சுதந்திர தினம் முதல் விருதுநகர் மாவட்டத்தில் பேரூராட்சி பகுதியில் பாலித்தீன் பயன்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற

News image
Updated On :7 ஆகஸ்ட் 2015, 1:21 pm

கோ.ஜெயக்குமார்

சுதந்திர தினம் முதல் விருதுநகர் மாவட்டத்தில் பேரூராட்சி பகுதியில் பாலித்தீன் பயன்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப் படி கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் விழிப்புணர்வு பேரணியை நடத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகித்தார்கள்.

மம்சாபுரம் பேரூராட்சி 1-வது வார்டில் உள்ள நரையன்குளம ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் தலைமை ஆசிரியை ஜெஸிந்தா தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை பாலித்தீன் ஒழிப்பு பதாகைகளை ஏந்திக் கொண்டும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் பேரணியாகச் சென்றனர். பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கிராமத்தில் வீடு வீடாக விநியோகித்தனர்.

பேரணியில் ஆசிரியைகள் பா.பாத்திமா ஞானம், வே.ராஜேஸ்வரி, ச.பொன்மலர், ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், செ.சண்முகநாதன் மற்றும் மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.