நண்பர்களுக்குள் மோதல்: குடல் சரிந்த நிலையில் தொழிலாளி சாவு

மதுரை பாலமேடு பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் தொழிலாளி கொல்லப்பட்டார்.
Updated on
1 min read

மதுரை பாலமேடு பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் தொழிலாளி கொல்லப்பட்டார்.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் குணா (30). திருமணமாகி மனைவி,குழந்தை உள்ளனர். கட்டட வேலையில் ஈடுபட்டுவந்த குணாவும், காமகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பாண்டியும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை குணாவுக்கும், பாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பியுள்ளார். இந்தநிலையில், ஞாயிறு இரவு குணா வீட்டுக்கு வந்த பாண்டி, சமரசமாகச் செல்வோம் எனக்கூறி அழைத்துச்சென்றுள்ளார். அதன்பின் குணா வீடு திரும்பவில்லை.

குணாவை அவரது வீட்டார் தேடிய நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் குணா குடல் சரிந்த நிலையில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாலமேடு போலீஸார் வழக்குப்பதிந்து குணா சடலத்தை மீட்டனர். குணாவை அழைத்துச் சென்ற பாண்டி தலைமறைவாகியதும் தெரியவந்தது. இதையடுத்து பாண்டியைக் கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com