சானியா மிர்சாவுக்கு கேல் ரத்னா விருது வழங்க இடைக்காலத் தடை!

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற சானியா மிர்சாவை விட தான் தகுதியானவன் என ஹெச்.என். கிரிஷா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சானியா மிர்சாவுக்கு கேல் ரத்னா விருது வழங்க இடைக்காலத் தடை!
Updated on
1 min read

சானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் நடந்த விம்பிள்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சானியா. அதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் அவருடைய பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி வி. கே. பாலி தலைமையில் அமைக்கப்பட்ட விருது கமிட்டி, சானியா மிர்சாவைத் தேர்வு செய்தது.

2012-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஹெச்.என். கிரிஷா. 2014 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் பெற்றார். அவர் சானியா மிர்சாவின் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

கேல் ரத்னா விருது பெற சானியா மிர்சாவை விட நான் தான் தகுதியானவன். 2011-2014 வரை சானியா எந்தவொரு பதக்கமும் பெறவில்லை, ஆனால், நான் இரண்டு பதக்கங்கள் பெற்று 90 புள்ளிகள் பெற்றுள்ளேன் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கிரிஷா வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை முடியும்வரை சானியாவுக்கு கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, சானியா மிர்சா விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com