திருப்பூர் மாவட்டத்தில் வதந்தி:தீப விளக்கு விற்பனை படு ஜோர் !

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை திடீரென பரவிய வதந்தியால் தீப விளக்கு விற்பனை படு ஜோராக நடைபெற்றது.
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை திடீரென பரவிய வதந்தியால் தீப விளக்கு விற்பனை படு ஜோராக நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் அம்மன் கழுத்திலிருந்து தாலி கழன்று கீழே விழுந்து விட்டது.இதனால் கனவன்மார்களுக்குத் தீங்கு ஏற்படும்.பரிகாரமாக வீட்டு வாசலில் மண் விளக்கு தீபமேற்றி வழிபட வேண்டுமென்கிற தகவல் பெண்கள் மத்தியில் காட்டுத் தீயாகப் பரவியது.

இதனால் கடைகளைத் தேடிப்பிடித்து வீட்டிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் விளக்கு வைத்து வழிபட்டனர்.விசாரித்த வகையில் கோயிலில் இது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை.வெறும் வதந்தி என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எது எப்படியோ  மழைக்காலத்தில் விற்பனையாகாமல் முடங்கிக் கிடந்த கொஞ்ச விளக்குகளும் விற்றுத் தீர்ந்து விட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com