மாவட்ட நூலகத்துறை சார்பில் குழந்தைகளுக்கு விலையில்லா கற்றல் உபகரண பெட்டிகள் வழங்கல்

விருதுநகர் மாவட்ட நூலக வளாகத்தில் குழந்தைகளுக்கான நவீன நூலக பிரிவில் நடந்த நிகழ்ச்சிக்கு தனியார் புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட நூலகத்துறை சார்பில் உறுப்பினர்களாக சேரும் குழந்தைகளுக்கு விலையில்லா கற்றல் உபகரணப்பெட்டி வழங்கும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட நூலக வளாகத்தில் குழந்தைகளுக்கான நவீன நூலக பிரிவில் நடந்த நிகழ்ச்சிக்கு தனியார் புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர்(பொறுப்பு) சே.ஜெகதீசன் வரவேற்புரை வழங்கினார். உள்ளாட்சி தணிக்கை துறையின் உதவி இயக்குநர் கே.கருப்பையா, பேராசிரியர் க.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் பங்கேற்று பேசுகையில், குழந்தைகளிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நவீன குழந்தைகள் நூலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனால், இந்நூலகத்தை குழநதைகள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வாசிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அதையடுத்து, இந்நூலகத்தில் முதலில் உறுப்பினர்களாக சேர்ந்த 200 பேருக்கு ரூ.200 மதிப்பிலான விலையில்லா கற்றல் உபகரணப்பெட்டிகளையும் அவர் வழங்கினார். இதற்கான மாவட்ட மைய நூலகர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com