நடத்தையில் சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் கைது

விருதுநகர் அண்ணாமலை செட்டியார் தெருவைச் சேர்ந்த ரெங்கராஜ்(34). இவர் பிளக்ஸ் மற்றும் விளம்பர பேனர்கள் கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி(25). இந்நிலையில்
Updated on
1 min read

விருதுநகர் அருகே நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அண்ணாமலை செட்டியார் தெருவைச் சேர்ந்த ரெங்கராஜ்(34). இவர் பிளக்ஸ் மற்றும் விளம்பர பேனர்கள் கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி(25). இந்நிலையில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்த கணவர் அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இதேபோல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரெங்கராஜ் தனது நண்பரான ஆறுமுகமும் சேர்ந்து வீட்டிற்குள் வைத்து கோமதியை இரும்பு கம்பியால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து வீட்டை பூட்டி விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு ரெங்கராஜன் மட்டும் கோமதியின் உடலை அப்புறப்படுத்துவதற்காக வந்தாராம். அப்போது, வீ்ட்டை திறந்தவுடன் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் சந்தேகம் அடைந்து உடனே பஜார் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீஸார் ரெங்கராஜனை மனைவியின் சடலத்துடன் கைது செய்தனர். இக்கொலைக்கு உடந்தையாக இருந்து தலைமறைவாக இருக்கும் ஆறுமுகத்தையும் தேடி வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து இக்கொலைக்கான காரணம் குறித்து  கோமதியின் கணவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com