விருதுநகர் மாவட்டத்தில் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு செயல்பட்டு வரும் அனைத்து அரசு மதுபான சில்லரை கடைகளையும் மூட வேண்டும் என ஆட்சியர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில் மாவட்ட மேலாளர் மற்றும் அனைத்து விற்பனை உரிமைதாரர்கள் இன்று(செவ்வாய்கிழமை) கடையை கட்டாயமாக மூடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவே இதையும் மீறி அரசு மதுபான கடை பணியாளர்கள் மற்றும் விற்பனை உரிமைதாரர்கள் ஆகியோர் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.