விருதுநகர் தனியார் ஹோட்டலில் வருமான வரித்துறையினர் சோதனை

விருதுநகர் நகராட்சி சாலையில் பெரிய அளவிலான தனியார் ஹோட்டல், அதையடுத்துள்ள கிளை மற்றும் தனியார் கல்லூரி எதிரே உள்ள ஹோட்டலிலும் மதுரை வருமான வரித்துறை ஆணையாளர்
Updated on
1 min read

விருதுநகரில் உள்ள தனியார் ஹோட்டல் மற்றும் அதன் கிளைகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் ரெய்டு செய்தனர்.

விருதுநகர் நகராட்சி சாலையில் பெரிய அளவிலான தனியார் ஹோட்டல், அதையடுத்துள்ள கிளை மற்றும் தனியார் கல்லூரி எதிரே உள்ள ஹோட்டலிலும் மதுரை வருமான வரித்துறை ஆணையாளர் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் மாலை 3.30 மணிக்கு ஒரே நேரத்தில் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர்.

அப்போது, ஹோட்டலின் வருவாய், செலவினங்கள், வருவாய்க்கு கேற்ப வரி செலுத்துகிறார்களா, வரி ஏய்ப்பு செய்கிறார்களா, மோசடியாக கணக்கு கையாள்கிறார்களா என்பது தொடர்பாக ஒவ்வொரு ஆவணங்களையும் பார்த்து ஆய்வு செய்தனர். மேலும், இது தொடர்பாக அந்த ஹோட்டலின் உரிமையாளர் வெற்றி என்பவரிடமும் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

மேலும், இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விரங்கள் எதுவும் கூற மறுத்துவிட்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com