ராணிப்பேட்டை சம்பவத்திற்கு காரணமாத வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை பணி நீக்க செய்ய வேண்டுமென விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : ராணிப்பேட்டையிóல தோல் தொழிற்சாலை பொது சுத்திகரிப்பு நிலைய கழிவு சேகரிப்பு தொட்டி உடைந்து அருகில் உள்ள தொழிற்சாலையில் தூங்கிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் வேதனைக்குரியது.
இதுவரை தோல் தொழிற்சாலை கழிவுநீரில் சிக்கியும், விஷவாயு தாக்கியும் சுமார் 50 பேர் இறந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. மேலும் தோல் கழிவால் மாசுக்கேடு சம்பந்தமாக விவசாயிகள் சார்பாக உச்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தொழிற்சாலைகள் அனைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக பராமரிப்பதாகவும், தோல் தொழிற்சாலை கழிவுநீரை முழுமையாக சுத்தம் செய்வதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது வேதனைக்குரியதாகும்.
மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் தான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. அதனால் வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

